Thursday, December 23, 2010

ஹஜ் நிறுவனங்களின் குளறுபடிகளால் தமிழகத்தில் கொந்தளிப்பு அதிர்ச்சி தகவல்கள்...

ஹஜ் நிறுவனங்களின் குளறுபடிகளால் தமிழகத்தில் கொந்தளிப்பு அதிர்ச்சி தகவல்கள்...


இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையை நிறைவேற்ற வருடந்தோறும் சுமார் 25 லட்சம் பேர் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் உலகின் முதல் ஆலயம் அமைந்திருக்கும் மக்கா நோக்கி புறப்படுகின்றனர்.

இந்தியாவிலிருந்து மத்திய அரசின் மானியத்துடன் ஹஜ் கமிட்டி சார்பில் இவ்வருடம் 1,25,000 பேர் மக்கா சென்றுள்ளனர். தனியார் ஹஜ் ஏஜென்ஸிகளின் மூலம் 48,487 பேர் வரை சென்றுள்ளனர்.

இவ்வருடம் தமிழகத்தில் தனியார் ஹஜ் ஏஜென்ஸிகள் சார்பில் விண்ணப்பித்த சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கடந்த வாரம் மக்கா செல்ல முடியாமல் அவர்களின் பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.


உறவினர்களிடமும், நண்பர்களி டமும் பயணம் சொல்லி, பெட்டி, படுக்கைகளுடன் சென்னைக்கு புறப்படத் தயாரான நிலையில் விசா கிடைக்கவில்லை என்ற செய்தி அவர்களை அதிர்ச்சிக்குள் ளாக்கி விட்டது! பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டும் உள்ளனர்.

இதற்கு என்ன காரணம்? யார் காரணம்? என விசாரணையில் இறங்கினோம். எல்லோரும் ஒரு மித்த நிலையில் குற்றம்சாட்டுவது தனியார் ஏஜென்ஸிகளைத்தான்! தமிழகத்தில் சமீபகாலமாக நூற்றுக்கும் மேற்பட்ட ஹஜ் ஏஜென்ஸிகள் ஆங்காங்கே உருவாகியிருக்கின்றன. இதில் 40 நிறுவனங்கள் மட்டுமே கோட்டா பெற்றவை என நஸீர் என்பவர் நம்மிடம் கூறினார். இவரும் ஒரு ஹஜ் ஏஜென்ஸி நடத்துகிறார்.

மற்ற நிறுவனங்கள் வெளி மாநில ஹாஜிகளின் இடஒதுக்கீடு களிலிருந்து உள்ஒதுக்கீடு பெற்று, அந்த விசாக்களை கூடுதல் விலைக்கு விற்று வருகிறார்கள் என்றும் பாதிக்கப்பட்ட ஹஜ் பயணிகள் நம்மிடம் குற்றம் சாட்டு கிறார்கள்.

“மும்பையில் தான் இது தொடர்பான பேரங்கள் நடக்கின்றன. ஹஜ் விசாக்களை வியாபாரமாக்கும் கள்ளச் சந்தை யாக மும்பை விளங்குகிறது” என்கிறார்கள்.

தனியார் ஹஜ் சர்வீஸ் நிறுவனங்களுக்கு மொத்த இடங்கள் 48,487 ஆகும். இதில் மொத்த இந்தியாவிலும் ஹஜ் கோட்டாக்கள் பெறும் முறையான நிறுவனங்களின் எண்ணிக்கை 599 ஆகும்.

இதில் தமிழகத்தில் 40 நிறு வனங்களுக்கு 4050 கோட்டா. கேரளாவில் 58 நிறுவனங்களுக்கு 7399 கோட்டா. மஹாராஷ்டிராவில் 236 நிறுவனங்களுக்கு 18419 கோட்டா என ஒதுக்கப்படுகிறது.

அதாவது மூன்றில் ஒரு பங்கு இடங்கள் மஹாராஷ்டிராவுக்கு மட்டுமே ஒதுக்கப்படுகின்றன. இதுதான் மும்பையை மையமாக வைத்து குதிரை பேரம் நடப்பதற்கு காரணம்.

இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. புனிதமான ஹஜ் பயணத்தை மையமாக வைத்து கோடிக்கணக்கில் வியா பாரம் நடைபெறுகிறது என்ற உண்மை இப்போது தான் வெளிஉலகிற்கு தெரிய வந்திருக் கிறது என நம்மிடம் பொருமினார் சென்னையைச் சேர்ந்த சம்சுதீன். இவரும் இந்த வருடம் ஹஜ் பயண வாய்ப்பை கடைசி நேரத்தில் இழந்தவர்.

அரசின் ஹஜ் கமிட்டி மூலமாக செல்லும்போது மொத்த செலவு 1,25,000 ரூபாய் மட்டுமே. அதில் விமான நிலையத்திலேயே 2500 சவூதி ரியால் (சுமார் 30 ஆயிரம் இந்திய ரூபாய்) ஹாஜிகளுக்கு உணவு, குர்பானி, வகைகளுக்காக கொடுக்கப்படுகிறதாம்.

ஆனால், தமிழகத்தில் தனியார் ஏஜென்ஸிகள் குறைந்தது 1,75,000 தொடங்கி 3,00,000 வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். அவரவர் நிறுவ னத்தின் புகழுக்கேற்ப தொகை மாறுபடுகிறது.

இது அநியாயம் என பலரும் குறை கூறுகிறார்கள். காரணம், சவூதி அரசு ஹஜ் விசாவை இலவசமாக தருகிறது. மும்பை வழியாகத் தொடங்கும் பேரங்கள் மூலம் ‘விசா’ கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது என்பது தான் உண்மை. இதை நம்மிடம் சமுதாய சேவகர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த விபரங்கள் எதுவும் தெரியாத ஹஜ் பயணிகள் “ட்ராவல்ஸ் நிறுவனங்கள் எல்லாம் சேவைக் கட்டணத்துடன் பணிபுரிவதாக நம்புகின்றனர்” என்று வேதனைப்படுகிறார் பாதிக்கப் பட்ட ஒரு ஹஜ் பயணி!
தனியார் ட்ராவல்ஸ்கள் அனைத்தும் சேவை ஒரு பங்கு என்றால், வணிகம் இரண்டு பங்காக கருதி செயல்படுவதாக பாதிக்கப் பட்டவர்கள் கூறுகிறார்கள். எல்லா நிறுவனங்களையும் அப்படிக் கூறிவிட முடியாது, என எதிர் குரல்களும் கேட்கின்றன. சுவையான உணவு, கட்டணம் அதிகமுள்ள ஹோட்டல் இவற்றையெல்லாம் பொறுத்து கட்டணங்கள் மாறுபடுகின்றன என்று சில தனியார் ட்ராவல் ஏஜென்ஸிகள் கூறுகின்றன. இந்த வருடம் தமிழகத்திலிருந்து ஹஜ் கமிட்டி மூலம் 4027 பேர் மக்கா சென்றுள்ளனர். ஆனால், விண் ணப்பித்தவர்கள் 12 ஆயிரம் பேர்களுக்கு அதிகமாம்!

இதுதான் பிரச்சனைகளுக்கு முக்கியக் காரணம் எனக் கூறப் படுகிறது. ஹஜ் கமிட்டியின் மூலம் மக்கா செல்ல வாய்ப்பில்லாத மீதி இரண்டு பங்கு எண்ணிக்கையிலானவர்கள் தனியார் ட்ராவல்ஸ்களை நாடுகின்றனர்.

அது பதிவு பெற்ற நிறுவனமா? இல்லையா? என்பது குறித்தெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை. எப்படி யாவது ஹஜ் பயணத்தை நிறை வேற்ற வேண்டும் என்ற ஆர்வம் அவர்களது கண்ணை மறைத்து விடுகிறது.
அதன் விளைவுதான் இது போன்றச் சிக்கல்கள். இனியாவது இதுகுறித்து கவனமுடன் இருப் பது மக்களின் கடமை என்று தமுமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஜெ.எஸ்.ரிபாயி நம் மிடம் கூறினார்.

இதற்கு ஒரே தீர்வு மத்திய அரசு இந்தியாவில் இருக்கும் 20 கோடி முஸ்லிம்களின் உண்மையான எண்ணிக்கையை சவூதி அரசுக்கு தெரிவித்து அதற்கேற்ப குறைந்தது 2 லட்சம் இடங்களையாவது கேட்டுப் பெற வேண்டும். இதன் மூலம் இந்திய ஹாஜிகளின் இடப்பற்றாக்குறை பிரச்சனை ஓரளவாவது தீரும் என்று சமுதாயத் தலைவர்கள் கருத்து கூறுகின்றனர்.

அதுவரை தற்காலிகமாக தனி யார் ஹஜ் ட்ராவல்ஸ்களை அந்தந்த மாநில வக்பு வாரியம் அல்லது ஹஜ் கமிட்டி மூலமாக ஒழுங்குபடுத்தும் பணிகளையாவது செய்ய வேண்டும் என்பது தான் பலரின் வேண்டுகோளாகும். இவ்விஷயத்தில் நல்ல பெயர் எடுத்த பல ட்ராவல் ஏஜென்ஸிகளும், பல பிரபலங்களும் சங்கடங்களுக்கு உள்ளாகியுள்ளனர். எங்கள் நோக்கம் யாரையும் ஏமாற்றுவது அல்ல என்று விளக்கமளித் துள்ளனர். அது உண்மைதான்.

ஆனால், ஹஜ் பயணத்தை வைத்து மும்பையில் நடக்கும் குதிரை பேரங்களிலிருந்து அவர்கள் இனி தங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். காரணம் புனிதப் பயணத்தை வணிகமயமாக்கும் கும்பலுக்கு துணைபோவது நியாயமில்லையே!

இடஒதுக்கீட்டில் திமுக அரசு துரோகம்-? காவல்துறை பணி நியமனத்தில் முஸ்லிம்களுக்கு வஞ்சகம்!

இடஒதுக்கீட்டில் திமுக அரசு துரோகம்-? காவல்துறை பணி நியமனத்தில் முஸ்லிம்களுக்கு வஞ்சகம்!

தமிழக அரசின் காவல்துறையில் தற்போது கூடுதலாக பத்தாயிரம் பணி இடங்கள் நிரப்ப தேர்வுகள் நடைபெற்றன. அதில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் விரைவில் பணியில் சேர இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.



பத்தாயிரத்துஅறுபது பணி இடங்களில் 1095 காவல்துறை உதவி ஆய்வாளர் களும் காவலர்கள் 8944 பேரும் சிறை காவலர்கள் பணிக்கு 486 பேரும் தீயணைப்பு படை வீரர்கள் பணிக்கு 630 பேரும் பணியில் சேரவிருக்கும் நிலையில் வழக்கம் போல் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு முறையில் துரோகம் இழைக் கப்பட்டதாக தகவல்கள் வெளி வந்ததை யடுத்து சமுதாய ஆர்வலர்கள் கொந்தளிக் கின்றனர்.2069 பணியிடம் ஆதி திராவிட சமூகத்தினருக்கும் 3343 பணியிடங்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும் பெண்கள் 2673 பேரும்தேர்வு செய்யப்பட்டனர்.

அந்தந்த சமூக மக்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டின்படி அவர்களுக்கு பணி இடங்கள் கிட்டத்தட்ட வழங்கப்பட்டு உள்ளன. உதாரணமாக அருந்ததியர் சமூக மக்களுக்கான பணியிடத்துக்கு 293 பேர் தேர்வாகியுள்ளனர்.

முஸ்லிம் சமூகத்துக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீதத்திற்கு வழங்கப்பட்டுள்ள பணியிடங்கள் எவ்வளவு தெரியுமா 263 தான்.

மூன்றரை சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு 350 பணியிடங்களுக்கு குறையாமல் அல்லவா இருக்கவேண்டும். கவனக்குறைவால் விளைந்த தவறாக இதனைக் கருதிவிட முடியாது. கணக்கில் பிழை செய்திருக்கிறார்கள். நாளை தேர்தலின் போது முஸ்லிம்கள் சரியான கணக்கு எது என நிரூபித்துக் காட்டுவார்கள்.

தவறை உடனடியாக சரி செய்து தமிழக அரசு அவப்பெயரில் இருந்து தப்புமா? நடவடிக்கை இருக்குமா

Monday, December 6, 2010

சரணடைந்த திமுக- சாதித்த காங்கிரஸ்?
Sunday, 28 November 2010 21:40
E-mail Print PDF


டெல்லியில் கோலோச்சிய ராஜாங்கம் முற்று பெற்றுவிட்டது. 1996க்குப் பிறகு திமுக டெல்லி அரசியல் சதுரங்கத்தில் அசைக்க முடியாத சக்தியாகவே விளங்கியது. 1996ம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸோடு டெல்லியை கலக்கியது. இடையில் 1998ம் ஆண்டு மட்டும் இடையில் ஒரு 13 மாதங்கள் ஆண்ட பா.ஜ.க கூட்டணியில் மட்டும் திமுக இடம்பெறவில்லை. அதன்பிறகு மதசார்பின்மையாவது மண்ணாங்கட்டியாவது என தனது திராவிடக் கொள்கையை புதைத்துவிட்டு பா.ஜ.கவோடு கைகோத்தது. டெல்லி என்ற தந்திர பூமியில் ஹை பாலிடிக்ஸ் என்ற உயர்நுட்ப அரசியலை திமுக கற்றுக் கொண்டது. திமுகவின் அகில(?) இந்திய தலைவரான முரசொலி மாறன் சர்வ அதிகாரத்துடன் வலம் வந்தார். காவி முகாமில் முங்கிமுங்கி மஞ்சள் குளித்தது திமுக, குஜராத் இனப்படுகொலையால் 3000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டால் என்ன? ஒரிசாவில் கிறித்துவப் பழங்குடி சமூக மக்களை மனித மிருகங்கள் விரட்டி வேட்டையாடினால் தான் என்ன? இந்தக் அக்கிரமங்களை கண்டிப்பதா? கண்டுகொள்ளவே மாட்டோம். எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடுப்போம். பதவியை மட்டும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என தன்னிலையில் உறுதி காட்டியது. ஐந்து ஆண்டுகளும் சங்பரிவார் கொள்கைகள், அஜண்டாக்கள் நாட்டின் சந்து பொந்துகளில் ஊடுருவும் சாகசம் திமுக ஆதரவினால் சாத்தியமாயிற்று.



முரசொலி மாறன் படுத்த படுக்கையாக இருந்தபோது துறை இல்லாத அமைச்சராக நீடித்தார். கறுப்பு சிவப்பு விசுவாசத்திற்கு காவி வழங்கிய பரிசு இது.

பா.ஜ.க கூட்டணி அரசின் கடைசி மணித்துளிவரை அரசாட்சி செய்த திமுக காற்று திசை மாறியதைக் கண்டு அணி மாறியது. சோனியா தியாகத் திருஉருவமாக வர்ணிக்கப்பட்டார்.

காங்கிரஸ் கூட்டணியிலும் கலைஞர் ராஜாங்கம் தான். அந்த ராஜாங்கத்திற்கு ராசாவின் ராஜினாமா விவகாரத்தின் மூலம் வேட்டு வைக்கப்பட்டு விட்டது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க மன்மோகன்சிங் உத்தர விட்டார். அமுலாக்க பிரிவும் வருமானவரித்துறையும் நோண்டி நொங்கெடுத்தன. அதிரகசிய ஆவணங்கள், தஸ்தாவேஜுகள் அனைத்தும் திட்டமிட்டே ஊடகங்களுக்கு லீக் செய்யப்பட்டது. முக்கிய உரையாடல்கள் கசியவிடப்பட்டன. அஸ்திவாரம் ஆட்டம் கண்டிருந்த ராஜாங்கத்தை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வழங்கிய ஆங்கில தொலைக்காட்சிக்கான நேர்காணல் முற்றிலும் தகர்த்துவிட்டது.

சென்னை அண்ணாசாலையில் தொலை பேசித் துறைக்கான சென்ட் ஹவுஸில் இது தொடர்பாக டீலிங் பேசியவர்கள் மீது சிபிஐ கண்பதிக்கத் தொடங்கியிருக்கிறது.

லண்டன் அருகே உள்ள ஹான்ஸ் ப்ரோ என்ற தீவை பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு இந்தியாவைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் வாங்கி இருப்பது தொடர்பாகவும் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

மலேசியாவின் ஜொகர்பாரு ஏரியா விற்கு அருகே 600 ஏக்கர் எஸ்டேட் வாங்கப்பட்டிருக்கிறது. சென்னை ஓட்டேரி அருகே பலமாடி கட்டிடம், பழைய மகாபலிபுரம் சாலையில் கட்டப்பட்டிருக்கும் பல மாடி அபார்ட்மெண்ட், சென்னைக்கு வெளியே கட்டப்பட்டு வரும் அரண்மனை மாதிரியான மாளிகை, சமீபத்தில் சீனாவிலுள்ள தொலைபேசி உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு வழங்கப்படும் திடீர் முக்கியத்துவம், அதற்கான அலுவலகங்கள் சென்னையில் அமைக்க சில முக்கிய விஜபிகள் காட்டிய ஆர்வம், தமிழகத்தில் திருச்சி உள்பட பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான கோடிகளை கொட்டி வாங்கிக் குவிக்கப்படும் கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என தோண்டத் தோண்ட பூதாகரமாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும் ஊழல் ராஜாங்கத்தின் கதை மெகா சீரியல் போல் நீளும் அபாயம் இருப்பதாக விஷயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. காங்கிரஸ் இப்போது தனது ராஜதந்திர நடவடிக்கைகளை திமுக மீது அரசியல் ரீதியாகவும் பிரயோகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரசின் பாட்டுக்கு திமுக தாளம் போடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.

“காங்கிரசு ஆசைப்பட்டால் மந்திரி காங்கிரசுக்கு பிடிக்காவிட்டால் எந்திரி” என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது. காங்கிரசுடன் பேரம் பேசும் சக்தியை திமுக இழந்து விட்டதாகவே அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை காட்டி அதன் ஊழலைக் காட்டி கலைஞரை வாய் மூடச் செய்து ஈழத்தில் பல்லாயிரம் தமிழர்களை கொன்று குவிக்க ஆதரவு அளித்தது காங்கிரஸ். இன்று திமுகவை முடக்கிப் போடவும் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தையே காங்கிரஸ் பயன்படுத்துகிறது.

ஈழமக்களின் சோகம் குறித்து கண்ணீர் விடாதவர் யாருமில்லை. இன்றைய திமுகவின் நிலை குறித்து கண்ணீர் விட யாருமில்லை